Wednesday, December 9, 2015

வளமுடன் வாழ 20 திருப்பதிகங்கள்

பதிகம் பற்றி... ஒரு பொருளைப் பற்றி பத்து அல்லது 11 பாடல்களால் பாடுவது பதிகம் எனப்படும். தேவாரத்தில் மட்டும் 11 பாடல்கள் இருக்கும். ஒரு ஊரிலுள்ள சிவனைப் புகழ்ந்து பாடும் தேவார ஆசிரியர்கள், அந்தப் பாடலைப் பாடினால் என்ன பலன் கிடைக்கும் என்பதைக் கடைசிப்பாடலில் சொல்லியிருப்பார்கள். குறிப்பாக, சம்பந்தரின் பாடல்கள் அவரது பெயரிலேயே முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.  காலத்தால் மிகவும் முற்பட்டதாகக் கருதப்படும் பதிகம்.

தேவார மூவர் என்று போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் தோன்றி தேவாரம் பாடிய பிறகு, தேவாரம் பெற்ற ஸ்தலங்களுக்கு தனி மதிப்பு ஏற்பட்டது. அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய இந்த மூவரும் அக்காலத்தில் இருந்த இந்தக் கோவில்களுக்குச் சென்று அங்கு குடி கொண்டுள்ள இறைவனைத் தரிசித்து இறைவன் மேல் பதிகங்கள் பாடியுள்ளனர். பல இடங்களில் பதிகங்கள் பாடி அற்புதங்களும் நிகழ்த்தியுள்ளனர்.
நான் ஆச்சரியப்பட்டு அதனில் என்னை கவர்ந்த பதிகங்களை இந்த சிறிய நூலில் (வளமுடன் வாழ 20 திருப்பதிகங்கள்) தொகுத்து உள்ளேன். 
 வளமுடன் வாழ 20 திருப்பதிகங்கள்
To Download & Read Click Here

0 comments:

Post a Comment