Wednesday, December 9, 2015

ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரம்

உலகத்தின் எல்லா நிகழ்வுகளுக்கும் காரணமான சக்தியை சரியான தொலைவிலிருந்து வழங்கி வருகின்ற சூரியனை வணங்குவது தொன்று தொட்டு உலகமெங்கும் நடைபெற்று வந்திருக்கிறது.


பெரும் மதங்கள் தோன்றிய போது முன்பிருந்த சூரிய வழிபாடான சௌரம் அந்தப் பெருமதங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டு இன்றைக்கும் நேரடியாக சூரியனை மட்டும் வழிபடாமல் பெருமதங்களின் தெய்வ உருவில் கதிரவனை வணங்கிவருகிறார்கள்.

இந்திய சமயங்களில் பெருஞ்சமயங்களாக ஆதிசங்கரரால் முறைப் படுத்தப்பட்ட ஆறு சமயங்களான சௌரம், காணபத்யம், சாக்தம், கௌமாரம், சைவம், வைஷ்ணவம் என்பவற்றுள் பகலவன் வழிபாடான சௌரம் இன்றைக்கு சைவ வைணவங்களில் கலந்துவிட்டது.

சிவசூரியன் என்றும் சூரியநாராயணன் என்றும் இன்றைக்கு சூரியன் வழிபடப்படுகிறான். சூரிய நமஸ்காரம் என்று ஒரு வழிபாட்டு முறை கேரளத்தில் இருக்கிறது. தமிழகத்தில் பலரும் அதிகாலையில் நீராடி விட்டு சூரியனை நோக்கி வணங்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

சூரிய பகவானுக்கான ஸ்தோத்ரம் என்று எண்ணும் போது மனத்தில் முதன்மையாக வந்து நிற்பது 'ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரம்'. இது சூரிய குலத்தில் உதித்த இராமபிரானுக்கு தமிழ் முனிவர் அகத்தியர் உபதேசித்ததாக வால்மீகி இராமாயணத்தில் வரும் ஒரு பகுதி. இந்த ஸ்தோத்திரத்தை ஒரே நேரத்தில் அடுத்தடுத்து ஒன்பது முறை ஜபித்தால் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் என்பது ஓர் நம்பிக்கை.
அர்த்தம் தெரியாமல் எந்த மந்திரமோ ,பாடலோ படிக்கக் கூடாது என்பது எனது கருத்து.அதனால் பொருளுரையுடன் இந்த ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரத்தினை தொகுத்து உள்ளேன்.

ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரம் டவுன்லோட் செய்ய
To Download & Read Click Here

0 comments:

Post a Comment